Friday, May 31, 2019

நான் விரும்பும் நாடு

நான் விரும்பும் நாடு

    ஜனநாயக நாட்டில் வாழும் மக்களாகிய நாம் அனைவரும், முதலில் நாம் செய்ய வேண்டிய அத்தியாவசியமான ஒன்று உள்ளது, அது தான் ஒருவரை ஒருவர் நேசிப்பது.
       சாதி மத பேதமின்றி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற எண்ணம் மக்களாகிய நம் அனைவருக்கும் இருக்க வேண்டும்.
       மொழி இனம் என்று பலவிதமான குழப்பங்களை மக்களிடையே ஏற்படுத்தும் தீய எண்ணம் கொண்ட மனிதர்கள்
மொழி இனம் ஒரு உணர்வு என்பதை உணர்ந்து ஒற்றுமையை
நிலைநாட்ட வேண்டும். 
      ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதமர்,  தவறுகள் செய்யும் தலைவர்களை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். தாம் இந்த கட்சியை சார்ந்தவன் என்பதை மறந்து, மக்களின் தேவைகளை அறிந்து,  மக்களை பாதிக்கும்  எந்த ஒரு திட்டமும் செயல் படுத்த வேண்டும். 
        இயற்கை வளங்களை அழிக்கும் மற்றும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ள எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க வேண்டும். 
          பட்டயப் படிப்பு முடித்த பின்பும் வேலையின்றி தவிக்கும் மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும். 
          இது போன்ற பல வகையான விஷயங்களை தெளிவாக உணர்ந்து செயல்படும் எனில் நாடு செழிக்கும்,  மக்களும் மிக நன்றாக இருப்பார்கள்...
         வாழ்க பாரதம் 
         

தமிழ் நண்பர்கள்

நான் சிறுவனாக இருந்த காலத்தில் நான் என்னை சுற்றி வாழ்ந்த மக்கள் அனைவரையும் நினைவு கூறும் தருணம்.
அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் கணினிமயமாக்கப் படாத சூழ்நிலை மக்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் மிகவும் சார்ந்து உறவாடிய காலம். ஊரில் ஆண்டுக்கொருமுறை மே மாதத்தில் நடைபெறும் இந்த திருவிழாவில் அனைவரும் குறிப்பாக நானும் எனது நண்பர்களும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த காலம்,  ஆனால் தற்போது கணினிமயமான காலத்தில் பழைய சந்தோஷம் கிடைப்பது இல்லை என்பது என் அனுபவத்தில் நடந்த நிகழ்வுகள்.
இது குறித்து உங்கள் கருத்து என்ன? 
தமிழ் நண்பர்கள்
அனைவருக்கும் வணக்கம் 

நான் விரும்பும் நாடு

நான் விரும்பும் நாடு      ஜனநாயக நாட்டில் வாழும் மக்களாகிய நாம் அனைவரும், முதலில் நாம் செய்ய வேண்டிய அத்தியாவசியமான ஒன்று உள்ளது, அது தா...